'இல்ல இல்ல அவர் அப்டிதான் சொன்னாரு'.. 'டெலிட் தான் பண்ணனும் ட்விட்டர'.. வெச்சு செய்யும் நெட்டிசன்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Jun 17, 2019 02:15 PM

மொழி என்பது ஒருவருடனே, பிறந்து வளர்ந்தது. உடல்மொழி என்பதுவும் அதுவேதான்.

fans made fun on Twitter that Virat Kohli says \"Ben Stokes\" goes viral

ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் பிறந்த ஒருவரது பேச்சும், செயல்பாடும், மொழியும், வழக்குச் சொல்லாடலும், பழக்க வழக்கங்களும் அவருடனே தொடர்ந்தபடி இருக்கும். சிலநேரங்களில் அவை உருவாக்கும் ஆச்சரியங்களும், நகைச்சுவைகளும் பலரையும் கவரும்படியாய் இருக்கும்.

அப்படித்தான் விராட் கோலியின் லிப் மூவ்மெண்ட் ட்ரெண்டாகி வருகிறது. நடப்பு உலகக் கோப்பை போட்டியில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அபாரமாக விளையாடி வருகிறது. இந்த போட்டிகளின்போது, விராட் கோலி தன்னுடைய உற்சாக உணர்ச்சிகளை மைதானத்தில் வெளிப்படுத்தும் விதமாக ஏதே சொல்கிறார்.

அவர் அவ்வாறு சொல்லும்போது, அந்த லிப் மூவ்மெண்ட், இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் என்கிற பெயரின் சத்தமில்லாத உச்சரிப்போடு பொருந்துவதுதான் ஹைலைட். இதுபற்றி ட்வீட் போட்ட பென் ஸ்டோக்ஸே, பேசாமல் தான் தன் ட்விட்டரை டெலிட்டே செய்துவிடலாம் என்றும், கோலி அவ்வாறு தன் பெயரைச் சொல்லவில்லை என்றாலும் கூட, கோலி பென் ஸ்டோக்ஸ் என்றுதான் சொல்கிறார் என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருவதை பார்க்கும்போது முதல் முறையாக லட்சம் முறை சிரிப்புணர்வு தோன்றக்கூடியதாக உள்ளதென்று கூறியுள்ளார்.

ஆனாலும் விடாத நெட்டிசன்கள், ‘இல்லை.. இல்லை கோலி பென் ஸ்டோக்ஸ் என்றுதான் சொல்கிறார்’ என்றும், இந்தியா ஒவ்வொரு முறையும் விக்கெட் எடுக்கும்போது பென் ஸ்டோக்ஸ் என்று சொல்வதால், இந்தியா விக்கெட் எடுக்கும்போது தனக்கு பெருமையாக இருப்பதாக பென் ஸ்டோக்ஸ் சொல்வது போலவும் ட்ரோல் செய்து வெளியிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.