‘அந்த பயம் இருக்கணும்ல..’ ‘இந்தியாவை எதிர்கொள்ளவே பயப்படும் அணிகள்..’ பாராட்டித் தள்ளிய முன்னாள் வீரர்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Saranya | Jun 18, 2019 01:49 PM
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியைத் தொடர்ச்சியாக 7வது முறை தோற்கடித்துள்ளதை அடுத்து பலரும் இந்திய அணியைப் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் இணையதளத்தில் இந்திய அணியைப் பாராட்டி எழுதியுள்ளார். அதில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ராகுலின் ஆட்டத்தைப் பாராட்டியுள்ள அவர் பாபர் அசாம் விக்கெட்டை வீழ்த்திய குல்தீப் யாதவின் பந்துவீச்சையும் புகழ்ந்துள்ளார்.
மேலும் அதில், “விராட் கோலி தலைமையிலான இந்திய அணியைப் பார்க்கும்போது 1970களில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணிதான் என் நியாபகத்திற்கு வருகிறது. இந்திய அணியுடன் விளையாடும்போது எதிரணியினர் மனரீதியாக பாதிப்படைகிறார்கள். அவர்களுக்கு பயம் வந்துவிடுகிறது. அதனால் எப்படி ஆடப்போகிறோம் என முன் வைத்த காலை பின் வைத்து விடுகிறார்கள்” எனப் பாராட்டியுள்ளார்.