'மனுஷன்னா விராட் கோலிதான்யா'... 'அவர் அப்படி செய்வாருனு எதிர்பார்க்கலை'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Jun 18, 2019 01:51 PM

தன்னை வசைபாடிய ரசிகர்களிடம் கைதட்டும்படி கூறிய விராட் கோலியின் செயல் பாராட்டுக்குரியது என்று, ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Steve Smith praises India captain Virat Kohli after World Cup gesture

தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில், இந்திய - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஆட்டம், கடந்த 9-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், விராட் கோலி களத்தில் இருக்கும் போது, மைதானத்தில் கூடியிருந்த இந்திய ரசிகர்கள், கோலிக்கு ஆதரவாகவும், ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்மித்தை 'சீட்டர்’ என்றும் கூச்சலிட்டனர்.

இதைக் கவனித்த இந்திய கேப்டன் விராட் கோலி, ரசிகர்களைப் பார்த்து, ஸ்மித்தை கைத்தட்டி உற்சாகப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். கோலியின் இச்செயலைக் கண்ட ஸ்மித், அவரை தட்டிக் கொடுத்து நன்றி தெரிவித்தார். இதையடுத்து கேப்டன் விராட் கோலியின் வீடியோவை சமூகவலைதளங்களில் பலர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து பாராட்டினர். இந்நிலையில் இதுபற்றி கருத்துத் தெரிவிக்காமல் இருந்த ஸ்மித், இப்போது விராட் கோலியை பாராட்டியுள்ளார்.

அவர் கூறும்போது, ‘ரசிகர்கள் என்னைப் பற்றி வசைபாடுவதை நான் என் காதில் கேட்டுக் கொள்ளவில்லை. ஏனெனில் நான் ஆட்டத்தின் முழு கவனத்தோடு இருந்தேன். மைதானத்தில் இருந்து ரசிகர்கள் என்ன சொன்னாலும் அதைப் பற்றி கவலையில்லை. அது என்னை பாதிக்காது. அதில் இருந்து வெளியே வந்துவிட்டேன். இருந்தாலும் விராட் கோலியின் செயல் அருமையானது, வரவேற்கத்தக்கது’ என்று பாராட்டு தெரிவித்தார்.