'முன்னாள் வீரரின் பேச்சைக் கேட்காத கேப்டன்'... விளாசிய ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Jun 17, 2019 11:34 AM

இந்திய அணிக்கு எதிரானப் போட்டியில், பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்ததையடுத்து, அந்நாட்டு அணியின் கேப்டனை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

Pakistan PM Imran Khan advice to Sarfaraz Win toss and bat first

உலகக் கோப்பை தொடரில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது. பரபரப்பான இந்தப் போட்டியில், இந்திய அணி அபார வெற்றிபெற்றது. இந்தப் போட்டிக்கு முன் பாகிஸ்தான் பிரதமரும், உலகக் கோப்பையை வென்ற முன்னாள் கிரிக்கெட் கேப்டனுமான இம்ரான்கான், ட்விட்டரில் பாகிஸ்தான் அணிக்கு அறிவுரை கூறியிருந்தார்.

அதில், கிரிக்கெட் போட்டியில் முக்கிய பங்கு வகிப்பது மன வலிமைதான். இந்திய அணிக்கு எதிரானப் போட்டியில் பயமின்றி விளையாடுமாறும், பாகிஸ்தான் அணியை அவர் வலியுறுத்தியிருந்தார். நாங்கள் தைரியமான கேப்டனையே கொண்டிருக்கிறோம். 1992-ம் ஆண்டு இறுதிப் போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்து வெற்றிக்கெண்டது.

அதேபோல், போட்டிக்கு முன் மழையால் பிட்சில் ஈரப்பதம் இல்லாதநிலையில், பாகிஸ்தான் அணி டாஸ் வென்றால், பேட்டிங் தேர்வு செய்ய வேண்டும் எனக் கூறி இருந்தார். ஆனால் டாஸ் வென்றதும், பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ஃப்ராஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால்தான் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்ததாக அந்நாட்டு ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.