'கடற்கரையில் கிடந்த விநோத பொருள்'.. "நாமளே கண்டு பிடிப்போம்!".. கிச்சனில் வைத்து தாய் செய்த காரியத்தால் விபரீதத்தில் முடிந்த சம்பவம்! எஸ்கேப் ஆன மகள்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Dec 14, 2020 04:40 PM

கடற்கரையில் கிடந்த பொருளொன்றை அது என்னவென்று தெரியாமல் வீட்டுக்கு கொண்டு வந்த பிரித்தானியாவை சேர்ந்த ஒரு தாயும் மகளும் அதைத் தங்கள் சமயலறையில் வைத்துள்ளனர்.

Mother and daughter took WWII GRENADE from beach explodes in kitchen

UKவின் Kent பகுதியைச் சேர்ந்த Jodie Crew என்பவர் தனது மகள் Isabella என்பவருடன்  கடற்கரைக்கு சென்றபோது அங்கு, கண்ட ஒரு வினோதமான பொருளை கலைப் பொருள் மாதிரி இருப்பதாக பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளார். பின்னர் தாயும் மகளும் அந்த பொருளை தங்களது வீட்டுக்கு எடுத்து வந்துள்ளனர்.

அத்துடம் அதை புகைப்படம் எடுத்து அகழ்வாராய்ச்சி ஆய்வு செய்யக் கூடிய இணையதளங்களுக்கு அனுப்பியிருக்கிறார். அதை பார்த்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு விளக்கத்தைக் கூற, எதை நம்புவது என தெரியாத Jodieயும் அவரது மகளும், அந்த மர்ம பொருளை தாமே ஆய்வு செய்ய அண்ணி, ஒரு சூடான கம்பி ஒன்றினால் அந்த பொருளை குத்த குபீரென தீ பிடித்துள்ளது.

ALSO READ: 'மொத்த குடும்பத்துக்கும், ஒத்த மெழுகுவர்த்தியாய் ஒளி வீசிய நடிகை சித்ரா!'.. அணைந்தது எப்படி? விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்கள்!

தீப்பற்றிய அந்த நொடியே அவரது மகள் தப்பியோடியிருக்கிறார். Jodieயும் உடனே அந்த பொருளை சமையலறையிலுள்ள பாத்திரம் கழுவும் சிங்கிள் போட்டு விட்டு, அவரும் வெளியேறி இருக்கிறார். அதற்கு அடுத்து நடந்ததை தாயும் மகளும் ஏழேழு ஜென்மத்திற்கும் மறக்க மாட்டார்கள். ஆம், கிச்சன் சிங்கிள் போட்டுவிட்டுச் சென்ற அந்த மர்மப் பொருள் வெடித்து சிதறியுள்ளது. இதில் சமையலறையின் பெரும்பகுதி நாசம் அடைந்ததை தடுக்க முடியவில்லை. பின்னர் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் இதை பார்த்த பின்னர் தான்,  Jodie மற்றும் அவரது மகள் Isabella இருவருக்கும் உண்மை தெரியவந்துள்ளது.

கலைப் பொருள் என்று எண்ணி கடற்கரையில் இருந்து எடுத்து வந்த அந்த பொருள் என்னவென்று தெரியுமா? அது  இரண்டாம் உலகப் போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட கையெறி குண்டு (WWII GRENADE). அதைத்தான் தாயும் மகளும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தியிருக்கிறார்கள்.

ALSO READ: "Like பண்ணுங்க.. Subscribe பண்ணுங்க!.. ஆயிரக் கணக்கில் சம்பாதிக்கலாம்!".. நம்பிய இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்!.. ‘இணையத்தில்’ அரங்கேறிய ‘மெகா மோசடி’! உஷார் மக்களே!

இதை அறிந்த இருவரும் இனி வாழ்க்கையில் தெரியாத எந்த பொருளையும் வீட்டுக்கு கொண்டு வருவதில்லை  என தோழிகளுக்கு சத்தியம் செய்து கொடுத்திருக்கிறார்கள்.

எனினும் இந்த வெடிப்பு சம்பவத்தின் போது அதிர்ஷ்டவசமாக Jodie, Isabella மற்றும் வீட்டில் இருந்த செல்லப்பிராணிகள் உட்பட யாருக்கும் எந்த பாதிப்பும் உண்டாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Mother and daughter took WWII GRENADE from beach explodes in kitchen | World News.