'இந்தியா' தொடரை வெல்கிறது... ஆனால் 'வேறொருவர்' தலைப்பு செய்தி ஆகிறார்... வெளிப்படையாக கிண்டலடித்த ஹிட்மேன்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Jan 21, 2020 12:22 PM

இந்தியா தொடரை வெல்கிறது. ஆனால் வேறொருவர் தலைப்பு செய்தியாகிறார் என, இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா தெரிவித்து உள்ளார்.

Rohit Sharma Trolls Yuzvendra Chahal\'s Shirtless Photo

சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிராக 5 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடவிருக்கிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா சக வீரரும், பவுலருமான யஷ்வேந்திர சாஹலை கிண்டல் செய்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். சட்டையில்லாமல் 'தி ராக்' ஜான்சன் போல டாட்டூவுடன் சாஹல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, ''இந்தியா தொடரை வெல்கிறது. ஆனால் வேறொருவர் தலைப்பு செய்தி ஆகிறார்,'' என கிண்டலடித்துள்ளார். பதிலுக்கு சாஹல், '' தி ராக்,'' என்று கூறி ஏகப்பட்ட எமோஜிக்களை வெளியிட்டு இருக்கிறார்.

Tags : #CRICKET #BCCI