அந்த 'ரெண்டு' பேரும் இல்லேன்னா... ஆஸ்திரேலியாவ 'ஜெயிக்கறது' ரொம்ப கஷ்டமாச்சே... என்ன பண்றது? கடும் 'சிக்கலில்' கோலி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் மோதும் 3-வது ஒருநாள் போட்டி நாளை(19) பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இரண்டு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால் நாளைய போட்டி மிகுந்த விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் நேற்றைய போட்டியில் பீல்டிங் செய்யும்போது ஓபனிங் பேட்ஸ்மேன் தவான், ரோஹித் சர்மா இருவரும் காயம் அடைந்தனர். இதனால் அவர்களுக்கு பதில் சாஹல், கேதார் ஜாதவ் இருவரும் மாற்று வீரர்களாக களமிறங்கினர்.
இந்தநிலையில் தவான், ரோஹித் இருவரின் காயம் குறித்து நாளைதான் தெரியவரும் என்றும், போட்டிக்கு முன்பாக அதுகுறித்து அதிகாரபூர்வ விளக்கம் அளிக்கப்படும் என்றும் பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது. முன்னதாக ரிஷப் பண்டும் காயம் காரணமாக விலகி இருப்பதால் கோலிக்கு பெரும் சிக்கல் காத்திருக்கிறது.
ஓபனிங் பேட்ஸ்மேன்கள் இருவரும் இறங்கவில்லை என்றால் சிவம் துபே, கேதார் ஜாதவ் இருவரையும் வைத்துத்தான் கோலி சமாளிக்க வேண்டியது இருக்கும். அதேபோல ஓபனிங் பேட்ஸ்மேன் ஒருவரையும் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் கோலி இருக்கிறார். இது தற்போது கோலிக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. இதை கோலி எப்படி சமாளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
