தூங்குறப்ப தான் அவங்க 'ரெண்டு' பேரும் பிரிவாங்க... முன்னணி வீரர்களைக் 'கிண்டலடித்த' கேப்டன்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Jan 18, 2020 10:51 PM

தூங்கும்போது தான் அந்த இருவரும் பிரிவார்கள் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் முன்னணி வீரர்களைக் கிண்டலடித்து இருக்கிறார்.

They spend every minute together Finch talks about teammates bromance

நேற்று ராஜ்கோட்டில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், லாபுஷனே இருவரும் 96 ரன்கள் எடுத்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

எனினும் இந்திய அணியின் பந்துவீச்சுக்கு முன்னால் இந்த கூட்டணியின் பேட்டிங் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. இதுகுறித்து அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச், ''ஸ்மித்-லாபுஷனே இருவரும் மிகவும் அபாரமாக ஆடினார்கள். அவர்கள் பார்ட்னர்ஷிப் எப்போதும் அருமை. ஆட்டக் களத்தில் இருவரும் எப்போதும் பிரியவே மாட்டார்கள். எனக்கு தெரிந்து அவர்கள் இருவரும் தூங்கும்போது தான் பிரிவார்கள் என்று நினைக்கிறேன்,'' என தெரிவித்தார்.