‘அவரு 12-வதா களமிறங்குனா கூட சதம் அடிப்பாரு’!.. அதிரடி வீரரை புகழ்ந்து தள்ளிய தவான்..! யாருன்னு தெரியுதா..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டு12-வது வீரராக களமிறக்கினால் கூட கே.எல்.ராகுலால் சதமடிக்க முடியும் என தவான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் சமீப காலமாக ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் நடந்து முடிந்த நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 1 சதம், 1 அரைசதம் எடுத்து 204 ரன்கள குவித்தார். அதேபோல் டி20 தொடரில் 2 அரைசதங்களை விளாசினார்.
முன்னதாக நடைபெற்ற ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்கதேசம் ஆகிய தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷுகர் தவான் காயம் காரணமாக விளையாடாததால், கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். அதேபோல் காயத்தால் விலகிய ரிஷப் பந்த்-க்கு பதிலாக விக்கெட் கீப்பிங் பொறுப்பையும் செய்து வருகிறார்.
இந்நிலையில் நடந்த முடிந்த நியூஸிலாந்து எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது. ஆனாலும் இப்போட்டியில் 5-வது வீரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் சதமடித்து அசத்தினார். இந்த நிலையில் கே.எல்.ராகுலை பாராட்டும் விதமாக ‘12-வது வீரராக களமிறங்கினால் கூட ராகுல் சதமடிப்பார்’ என தவான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
