'எங்க அம்மா கிட்ட பேசணும்'...'தவித்த மகன்'... 'ரயில்வேயின் அதிரடி ஆக்‌ஷன்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Oct 01, 2019 03:14 PM

அஜ்மிர் ஷெல்டா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்யும் தனது தாயினை தொடர்பு கொள்ள முடியவில்லை என,  ஷாத்வாத் என்பவர் ரயில்வே துறை மற்றும் ரயில்வே அமைச்சரின் ட்விட்டர் கணக்கையும் டேக் செய்து உதவி கோரினார். இதற்கு உடனடியாக பதிலளித்த ரயில்வே துறை, உங்கள் தாய் குறித்த பயண விவரங்களை பகிருமாறு ரயில்வே துறை கேட்டிருந்தது.

Indian Railways help to a man who couldnt contact his mother

இதற்கு ஷாத்வாத் தனது தாயின் பயண விவரங்களை பகிர்ந்தார். இதற்கு பதிலளித்த ரயில்வே ''உங்கள் கோரிக்கை சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ட்வீட் செய்திருந்தது''. அதற்கு பதிலளித்த ஷாத்வாத்,'' உங்களின் உதவிக்கு நன்றி. உங்களுக்கு நான் கடமைப்பட்டுள்ளேன்'' என பதில் ட்வீட் போட்டிருந்தார்.

இதனிடையே இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரயில்வே '' பயணிகள் பாதுகாப்புடன் இருப்பதை ரயில்வே உறுதி செய்கிறது. தாயுடன் பேச முடியாமல் தவித்த மகனின் கோரிக்கையை ரயில்வே துறை நிறைவேற்றியுள்ளது'' என கூறியுள்ளது. ரயில்வே துறையின் துரித நடவடிக்கைக்கு நெட்டிசன்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.