'பனிஷ்மென்ட்' குடுத்தா.. இப்டியா 'என்ஜாய்' பண்றது?...'நொந்து' போன ஓனர்..'வைரல்' வீடியோ!
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்By Manjula | Oct 05, 2019 08:38 PM
பொதுவாக நாய்,பூனை என செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் அவை ஏதாவது சேட்டை செய்தால், அவற்றுக்கு தண்டனை அளிப்பார்கள்.மறுமுறை அப்படி செய்யக்கூடாது என்பதற்காகவும்,ஒரு பயம் இருக்க வேண்டும் என்பதற்காகவும் சிறிய தண்டனைகளை அளிப்பார்கள்.

அதுபோல தனது வளர்ப்பு பிராணிக்கு ஓனர் ஒருவர் கொடுத்த தண்டனை தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகி உள்ளது.மியாவ்ஜி என்ற பெயரில் ட்விட்டரில் இயங்கி வரும் ஒருவர் தனது பூனைக்கு ஸ்பிரே பாட்டிலில் தண்ணீர் வைத்து வாயில் அடித்து தண்டனை அளிக்கிறார்.அது இதுபோல பல தண்டனைகளை பார்த்து இருக்கும்போல அசால்ட்டாக அந்த தண்ணீரை குடித்து விட்டு செல்கிறது.
This punishment is not working... pic.twitter.com/Gky81iQA0q
— Mr. Meowgi (@Mr_Meowwwgi) October 3, 2019
இதைப்பார்த்த பலரும் தாங்கள் தங்களது செல்லப்பிராணிக்கு கொடுத்த தண்டனைகளை பகிர, இதுவரை சுமார் 11.5 மில்லியன் பேர் இந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர்.
