'இறந்த' நண்பனை..சவப்பெட்டியால் கோல் போட வைத்து..'கண்கலங்க' வைக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Oct 01, 2019 01:17 PM

இந்த உலகில் அம்மா-அப்பா, அண்ணன்-தம்பி, அக்கா-தங்கை, கணவன்-மனைவி ஆகியவற்றுக்கு இணையான ஒரு உறவு உண்டென்றால் கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம் அது நண்பன் தான்.யாரிடமும் பகிர முடியாத தகவல்களை கூட நண்பனிடம் பகிர்ந்து கொள்ளலாம்.இவ்வளவு சிறப்பு இருப்பதால் தான் நண்பர்கள் தினம் என தனியாக ஒரு தினத்தையே நாம் கொண்டாடி மகிழ்கிறோம்.

 

Football Players Emotional Video, Goes Viral on Social Media

இவ்வளவு சிறப்புகள் கொண்ட நட்பு சில சமயங்களில் கண்களையும் கலங்க வைக்கும்.அந்த வகையில் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி அனைவரையும் கண் கலங்க செய்துள்ளது.தங்களது நண்பன் இறந்து அவனது சடலம் சவபெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளது.அதனை எடுத்துக்கொண்டு மைதானத்துக்குள் வைத்து அனைவரும் நண்பர்கள் அனைவரும் பந்து விளையாடி, அந்த நண்பனின் சவப்பெட்டி வழியாக கோல் போட வைக்கின்றனர்.

 

இதனைப்பார்த்து சுற்றிலும் நூற்றுக்கணக்கான மக்கள் கண்கலங்க அந்த நண்பர்கள் அனைவரும் தங்களது நண்பனின் சவப்பெட்டியை சூழ்ந்து நின்று அழுகின்றனர்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, பலரையும் நெகிழ வைத்துள்ளது.

Tags : #TWITTER