ஐபிஎல்-ல மனசுல வச்சிக்கிட்டு இப்டியா பழிவாங்கறது’.. முதல் பந்தே விராட் கோலியின் தலைக்கு குறிவைத்த ரபாடா!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jun 06, 2019 02:53 PM

உலகக்கோப்பையின் லீக் சுற்றின் முதல் போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

WATCH: Rabada\'s first ball to Virat Kohli

இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான உலகக்கோப்பை லீக் சுற்றில் இந்தியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கோலி தலைமையிலான இந்திய அணி அதிக இளம் வீரர்களுடன் உலகக்கோப்பையில் களம் கண்டுள்ளது. இதில் தோனி போன்ற அனுபவ வீரர்கள் இருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலமாக கருதப்படுகிறது.

இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் தனது கருத்தை தெரிவித்திருந்தார். அதேபோல் உலகக்கோப்பையில் பும்ராவின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்திருந்தார். அதை நிரூபிக்கும் வகையில் தென் ஆப்பிரிக்காவின் இரு முக்கிய விக்கெட்டுகளை ஒரே ஓவரில் எடுத்து அசத்தினார்.

அதேபோல் தென் ஆப்பிரிக்க அணியிலும் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா சிறப்பாக பந்துவீசி இந்திய அணியை அச்சுறுத்தினார். முன்னதாக ஐபிஎல் போட்டியில் விராட் கோலி நடந்துகொண்ட விதம் குறித்து ரபாடா கோலியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அந்த கோபத்தின் வெளிப்பாடாக கோலி எதிர்கொண்ட ரபாடாவின் முதல் பந்தே கோலியின் தலையை தாக்குவது போல் சென்றது.

Tags : #ICCWORLDCUP2019 #VIRATKOHLI #RABADA #INDVSA