‘பீல்டிங் பன்னுன 'தல' ஆரவாரப்படுத்திய ரசிகர்கள்’! ‘அதிர்ந்த ஓவல் மைதானம்’.. வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Arunachalam | May 26, 2019 06:35 PM

நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ரசிகர்கள் தோனி தோனி என்று முழக்கமிட்டதால் ஒவல் மைதானம் அதிர்ந்தது.

cricket fans cheer up dhoni in between the match held in oval ground

உலக கோப்பை தொடர் வரும் 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்நிலையில், பயிற்சி ஆட்டங்கள் கடந்த 24 ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, மே 25 ஆம் தேதி நடந்த பயிற்சி ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியது.

இந்த போட்டியில்,  இந்திய அணியில் தோனிக்கு பதிலாக தினேஷ் கார்த்தி விக்கெட் கீப்பராக செயல்பட்டார். இந்நிலையில், சிறிது நேரம் ஓய்வெடுத்த தோனி பின் பவுண்டரி எல்லை கோட்டுக்கு அருகே பீல்டிங் செய்தார். இந்திய அணிக்காக ஆரம்ப காலத்தில் ஃபில்டிங் செய்த தோனி பல ஆண்டுகளுக்கு பின் இப்போது தான் ஃப்லிடிங் செய்துள்ளார்.

இதனையடுத்து, தோனி பவுண்டரிக்கு அருகே ஃபில்டிங் செய்த போது ஓவல் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ‘தோனி, தோனி’ என்று ஆரவார கூச்சல் எழுப்பினர். இந்நிலையில், தற்போது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

Tags : #ICCWORLDCUP2019 #MSDHONI #OVAL GROUND