‘தோனி எங்களுக்கு சுதந்திரம் கொடுப்பார், கோலி..?’ இந்திய அணி குறித்துப் பகிர்ந்த பிரபல வீரர்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | May 27, 2019 03:30 PM

மே 30ஆம் தேதி தொடங்கவுள்ள உலகக் கோப்பை தொடரில் குல்தீப் யாதவ் மற்றும் யுவேந்திர சாஹல் இருவரும் முதல்முதலாக விளையாடுகின்றனர்.

ms dhoni gives us freedom virat kohli gives us confidence says kuldeep

சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்துப் பேசிய குல்தீப் யாதவ், “எனக்கும் சாஹலுக்கும் ஆடுகளத்திலும், அதற்கு வெளியேயும் நல்ல புரிதல் உள்ளது. மிடில் ஓவர்களில் இருவரும் எவ்வளவு விக்கெட்டுகள் எடுக்க முடியுமோ அவ்வளவு விக்கெட்டுகள் எடுத்து எதிரணி ரன் குவிப்பதைத் தடுப்போம். கோலி தலைமையில் அணி சிறப்பாக விளையாடி வருவதால் கண்டிப்பாக இந்த முறை உலகக் கோப்பையை வெல்லுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

தோனி குறித்துப் பேசிய குல்தீப், “நாங்கள் எப்போது சந்தேகம் என்றாலும் தோனியிடம் தான் செல்லுவோம். அவரிடம் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு இருக்கும். பவுலிங் செய்யும்போது சிறிது கடினமாக இருந்தாலும் தோனியைப் பார்த்தாலே போதும் அவரே வந்து உதவி செய்வார். எனக்கு மட்டுமல்ல எல்லா பவுலர்களுக்கும் அப்படிதான். பேட்ஸ்மேனின் உடல் மொழியை உடனே புரிந்து கொண்டு எப்படி பந்து வீச வேண்டுமென எங்களுக்கு உதவுவார்” எனக் கூறியுள்ளார்.

மேலும் பேசும்போது, “கோலி மற்றும் தோனி இருவரும் தான் அணியின் முதுகெலும்பு. தோனி எங்களுக்கு சுதந்திரம் கொடுப்பார். கோலி எங்கள் தன்னம்பிக்கையை அதிகப்படுத்துவார்” எனக் கூறியுள்ளார்.

Tags : #ICCWORLDCUP2019 #TEAMINDIA #DHONI #MAHIBAI #KOHLI #KULDEEP