‘ஸ்டெம்பை விட்டு விலகி பேட்டிங் செய்ய முயற்சித்து சர்ச்சையை கிளப்பிய பொல்லார்ட்’.. பரபரப்பில் முடிந்த கடைசி ஓவர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | May 12, 2019 10:18 PM

சென்னை அணியின் சிறப்பான பந்துவீச்சால் மும்பை அணி 149 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.

WATCH: Pollard protests against umpire call in last over against CSK

ஐபிஎல் டி20 தொடரின் 12 -வது சீசனின் இறுதிப்போட்டி இன்று(12.05.2019) ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. இதில் நடப்பு சேம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்டை நடத்துகின்றன. ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மூன்று முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் எந்த அணி கோப்பையை கைப்பற்ற போகிறது என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அடுத்து இன்றைய இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இதில் தொடக்க வீரர்களாக ரோகித் ஷர்மா மற்றும் டி காக் களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி சென்னை அணி பந்துவீச்சாளருக்கு நெருக்கடியை கொடுத்தனர். இதனை அடுத்து சர்துல் தாக்கூர் ஓவரில் டி காக்கும், தீபக் ஷகர் ஓவரில் ரோஹித் ஷர்மாவும் அடுத்தடுத்து அவுட்டாகினர். 20 ஓவர்களின் முடிவில் மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக பொல்லார்ட் 41 ரன்கள் அடித்தார். மேலும் இப்போட்டியின் கடைசி ஓவரில் பொல்லார்ட் ஸ்டெம்பைவிட்டு தள்ளி நின்று பேட்டிங் செய்ய முயற்சித்த செயல் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இதனைத் தொடர்ந்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி விளையாடி வருகிறது.

Tags : #IPL #IPL2019 #POLLARD #WHISTLEPODU #YELLOVE #MIVCSK