'கொரோனா'வுக்கு எதிரான போரில்... 'வெற்றிமுனையில்' இருக்கிறோம்... 'இதை' மட்டும் செய்யுங்க!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | Apr 13, 2020 01:20 AM

கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றிமுனையில் இருக்கிறோம் என, இத்தாலி அதிபர் தெரிவித்து இருக்கிறார்.

Italy President Sergio Mattarella Talks about COVID-19

உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி உள்ளது. அங்கு கொரோனாவுக்கு இதுவரை 19,418 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்து இருக்கின்றனர். எனினும் தற்போது அங்கு உயிரிழப்பு மெல்ல குறைந்து வருவதாக இத்தாலி மக்கள் பாதுகாப்புத்துறையின் தலைவர் ஏஞ்சலோ போரேலி தெரிவித்து இருக்கிறார்.

இந்த நிலையில் கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி முனையில் இருப்பதாக இத்தாலி அதிபர் செர்ஜியோ மேட்டரெல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ''கொரோனாவால் பெரும்பாலோனோர் ஈஸ்டர் பண்டிகையை தனியாக கொண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறீர்கள். கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெறும் நிலையில் இருக்கிறோம். முழுமையாக தடுப்பு மருந்து உருவாகும் வரை நம்பிக்கையை விதைக்க வேண்டும்,'' என உருக்கம் தெரிவித்து இருக்கிறார்.