‘24 மணிநேரமும் பம்பரமாய் சுழன்று வேலை’.. அசதியில் குப்பை வண்டியிலேயே தூங்கிய ‘தூய்மை பணிப்பெண்’.. நெஞ்சை நொறுக்கிய போட்டோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா தடுப்பு பணியில் ஈடுப்பட்டு வரும் தூய்மை பணிப்பெண் ஒருவர் இடைவிடாத வேலை அசதியில் குப்பை வண்டியிலேயே தூங்கும் போட்டோ ஒன்று வெளியாகி அனைவரையும் உருக வைத்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பக்கப்பட்டது. இதனால் விமானம், ரயில், பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் மக்கள் அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியே வர வேண்டாம் என அரசு அறிவுறித்தியுள்ளது.
சென்னையில் அத்தியாசிய பொருட்களை வீட்டுக்கே கொண்டு வந்து தரும் வகையில் முதலமைச்சர் பழனிசாமி பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதேபோல் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் காவலர்கள் இரவு பகலாக கடுமையாக பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்கள், குடும்பங்களை மறந்து இரவு பகலாக கடுமையாக பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில் நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை முளகுமூடு பகுதியில் இரவு வேளையில் தூய்மை பணியாளர்கள் ஒவ்வொரு இடமாக துப்புரவு பணியில் ஈடுப்பட்டு இருந்துள்ளனர் அப்போது தூய்மை பணிப்பெண் ஒருவர் வேலை அசதியில் தன்னை மறந்த குப்பை வண்டியிலேயே தூங்கியுள்ளார். இதனை ரோந்துப் பணியில் ஈடுப்பட்டிருந்த தக்கலை சரக டி.எஸ்.பி ராமசந்திரன் தனது செல்போனில் படமெடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி தூய்மை பணியாளர்களுக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
