‘கொரோனா பயத்தால்’... ‘சூட்கேசுக்குள் நண்பனை வைத்து’... ‘வசமாக சிக்கிய மாணவன்’!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா பயம் காரணமாக ஊரடங்கு நெருக்கடியால் அபார்ட்மெண்ட்டுக்கு நண்பரை அழைத்துவர 17 வயது மாணவர் ஒருவர் விநோத முறை கையாண்டு மாட்டிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்படக்கூடும் என்ற அச்சத்தால் பெரிய, பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் வெளியாட்கள் உள்ளே அனுமதிக்கப்படுவது இல்லை. இந்நிலையில், கர்நாடக மாநிலம் மங்களூரு ஆர்யசமாஜ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், வாடைகைக்கு 17 வயது மாணவர் ஒருவர் தங்கியிருந்துள்ளார்.
ஆனால், தனியாக இருந்த அச்சம் காரணமாக, துணைக்கு பக்கத்து பகுதியில் வசித்த நண்பரை அழைத்துவர நினைத்துள்ளார். ஆனால் அபார்ட்மெண்ட் அசோசியேஷன் ஒத்துக்கொள்ளாது என்பதால், விரக்தி அடைந்த அவர், திட்டம் ஒன்று திட்டமிட்டுள்ளார். அதன்படி, அபார்மெண்ட் கேட் அருகே நண்பரை சூட்கேசில் வைத்து ஸ்கூட்டரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கொண்டு வந்துள்ளார். பின்னர், சூட்கேஸை தள்ளிச் செல்ல முடியாமல் தள்ளிச் செல்ல, அபார்மெண்ட்வாசிகள் சூட்கேஸை திறக்கச் சொல்லியுள்ளார்கள்.
சூட்கேஸை திறந்ததும் அதிலிருந்து நண்பன் வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து இருவரையும் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்கள், மாணவர்களின் பெற்றோரை அழைத்து சொல்ல அவர்களும் இதைக் கேட்டு திகைத்துப் போயுள்ளனர். பின்னர் எச்சரித்து மாணவர்களை பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.