'மாஸ்க் அணிவதை டிக்டாக்கில் கிண்டல் செய்தவருக்கு கொரோனா...' 'வைரஸ் போகணும்னா கடவுள்கிட்ட கேளுங்க..' நம்ம எல்லாரையும் அவர் காப்பாத்துவார்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Apr 13, 2020 11:19 AM

டிக்டாக்கில் கொரோனா வைரஸிற்கு முகக்கவசம் அணி அணிவதை கிண்டல் செய்து டிக்டாக் செய்த வாலிபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Coronavirus infection is confirmed for those who mock the mask

கொரோனா வைரஸ் பரவும் இந்தக்காலக்கட்டத்தில், மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு டிக் டாக்கில் முகக்கவசம் அணிவதை கேலி செய்து ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் அனைவரும் கடவுளை நம்புங்கள், அவர் நம்மை காப்பாற்றுவார், இந்த முகக்கவசங்களை தூக்கி எறிந்துவிடுங்கள் கடவுள் மேல் நம்பிக்கை வையுங்கள் என பல்வேறு ஏக வசனங்கள் பேசி டிக்டாக் செய்துள்ளார்.

கொஞ்ச நாட்களாக அந்த இளைஞருக்கு காய்ச்சல் மற்றும் இருமல் ஏற்பட்டக் காரணத்தால் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தனிமைப்படுத்தும் வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் அங்கு அவர் அனுமதித்திருக்கும் மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்தும் இடம் ஆகியவை தொடர்பான வீடியோகளையும் டிக்டாக்கில் பதிவேற்றம் செய்தார். அதுமட்டும் இல்லாமல் இதற்கு முன் முகக்கவசம் போட வேண்டாம் என்று சொல்லிய அவர் முகக்கவசம் அணிந்து, அவரின் உடல்நிலை சரியாகுமாறு கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் தற்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வீடியோக்களை பற்றி அறிந்த மருத்துவமனை நிர்வாகம் அந்த இளைஞரிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்தனர். அவருடைய போனில் இதே போன்று பல்வேறு வீடியோக்களை எடுத்து அதை பதிவேற்றம் செய்ய வைத்திருந்ததையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இளைஞரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும், ஆனால் இவர் எந்த ஊருக்கும் பயணம் செய்யவில்லை இருப்பினும் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

Tags : #MASK #CORONA