‘ரூம் போட்டு யோசிப்பாங்களோ’!.. ‘ட்ரோன் வச்சு வீடு வீடா சப்ளை’.. போலீசாருக்கு ‘ஷாக்’ கொடுத்த டிக்டாக் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஊரடங்கு சமயத்தில் ட்ரோன் மூலம் வீடுகளுக்கு பான் மசாலா விநியோகம் செய்த நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் காய்கறி, மளிகை, பால் மற்றும் மருந்து போன்ற கடைகள் மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் உள்ளிட்ட மற்ற கடைகள் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பால் கேனில் மது கடத்துவது, டாஸ்மாக்கை உடைத்து கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில் குஜராத்தின் மோர்பி பகுதியில் ட்ரோன் மூலம் பான் மசாலா வீடுகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான டிக்டாக் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் உடனே இதுதொடர்பாக இருவரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.