'வூகான்' ஆய்வகத்துக்கு 'அமெரிக்கா நிதியுதவி...' 'ஆதாரங்களை' வெளியிட்டது 'தி மெயில்' பத்திரிகை... 'சொந்த காசில்' சூனியம் வைத்துக் கொண்ட 'அமெரிக்கா...'
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் உள்ள வூகான் வைரஸ் ஆய்வகத்துக்கு, அமெரிக்க சுகாதாரத்துறை சார்பில் 30 கோடி ரூபாய் (3.7 மில்லியன் டாலர்) நிதியுதவி அளிக்கப்பட்ட ஆதாரங்களை தி மெயில் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதம் ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோரை பலிவாங்கியுள்ள கொரோனா வைரஸ் எப்படி பரவியது என்பது குறித்து இன்னும் ஒரு முடிவான கருத்துக்கு வர முடியவில்லை.
சீனாவின் வூகான் நகரில் உள்ள கடல் உணவுகள் சந்தையில் இறைச்சி மூலமாகத்தான் இந்த வைரஸ் மனிதனுக்கு பரவியதாக முதலில் கூறப்பட்டது. அதே சமயம், வூகான் சந்தையில் இருந்து 20 மைல் தொலைவில் அமைந்துள்ள வூகான் வைரஸ் ஆய்வு நிலையத்தில் இருந்து இந்த வைரஸ் வெளியாகி இருக்கலாம் என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. இதை சீனா மறுத்தாலும், தற்போது அதற்கான வலுவான சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
2002-2003ல் சார்ஸ் வைரசால் சீனா கடுமையான பாதிப்பை சந்தித்ததும், கொடூரமான வைரஸ்களை பற்றி ஆய்வு நடத்த வுகானில் இந்த ஆய்வகம் கட்டப்பட்டது.
இதில், கொரோனா குடும்பத்தை சேர்ந்த சார்ஸ் வைரஸ் குறித்து ஆய்வு நடத்த, வுகான் ஆய்வகத்திற்கு அமெரிக்காவே 30 கோடி நிதி உதவி அளித்துள்ளதாக தி மெயில் பத்திரிகை சில ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் நிதி அளித்த ஆய்வகங்கள் பட்டியலில் வுகான் ஆய்வகமும் உள்ளது.
அப்போது வூகான் ஆய்வகத்தில், யுனான் மாகாணத்தில் உள்ள குகைகளில் இருந்து பிடித்துவரப்பட்ட வவ்வால்களை கொண்டு கொரோனா மரபணு சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில், வவ்வால்களுக்கு கொரோனா வைரசின் மரபணு வரிசைமுறை இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
எனவே, வுகான் ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் வெளியாகி இருக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை என்றே பலரும் கருதுகின்றனர். அதே சமயம், ஆய்வக விஞ்ஞானி ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவர் மூலமாக வுகான் நகரில் இந்த வைரஸ் பரவியிருக்கலாம் என்றும் மற்றொரு அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கிறது.
எனவே, உணவு சந்தையிலிருந்து இந்த வைரஸ் வெளிப்பட்டிருக்காது என்ற தகவல்கள் சர்வதேச அளவில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.