'அதெல்லாம் ஒரு காலம்'...'இப்படி பாத்து எவ்வளவு நாளாச்சு'...இணையத்தை கலக்கும் போட்டோஸ்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | Sep 04, 2019 10:33 AM

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தனது சமகால அணி வீரர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

Tendulkar spent time with his former teammates including Yuvraj

இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரும், ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவருமான முகேஷ் அம்பானி, தனது அண்டிலா வீட்டில் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடினர். இந்த விழாவில் சினிமா நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள், மற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் என பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், ஷகீர் கான், ஹர்பஜன் சிங், யுசஃப் பதான், அஜித் அகர்கர் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

அத்துடன் அவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து எடுத்து கொண்ட புகைப்படத்தை, தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சச்சின் டெண்டுல்கர், ‘வாழ்நாள் அணி’ என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இதனை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகிறார்கள். இப்படி அனைவரையும் ஒன்றாக பார்த்து எவ்வளவு நாள் ஆகிவிட்டது என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகிறார்கள்.

இதனிடையே யுவராஜ் சிங் தான் எடுத்த செல்ஃபி புகைப்படத்தை இணையதளத்தில் பகிர்ந்து, ‘பழமை பொன் போன்றது’ என்றும், தங்கள் வயதை குறிக்கும் வகையில் ‘ரொம்ப பழைமை இல்லை’ என்று கூறியுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Teammates for life!

A post shared by Sachin Tendulkar (@sachintendulkar) on

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Old is gold ! Not so old @pragyanojha @parthiv9 !!! @sachintendulkar @harbhajan3 @zaheer_khan34 @yusuf_pathan

A post shared by Yuvraj Singh (@yuvisofficial) on

Tags : #CRICKET #YUVRAJSINGH #AMBANI #SACHIN TENDULKAR #ZAHEER #YUVRAJ #HARBHAJAN #SQUAD GOALS