‘இந்தியாவோட ரொம்ப முக்கியமான ப்ளேயர் இவர்தான்’‘இவர் மட்டும் இல்லனா டீமுக்குதான் லாஸ்’.. புகழ்ந்து தள்ளிய பிரபல வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Sep 04, 2019 04:03 PM

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நாயகன் பும்ரா தான் என இர்பான் பதான் புகழ்ந்துள்ளார்.

Bumrah is the most important cricketer in Indian team, Says Irfan Path

வெஸ்ட் இண்டீஸிக்கு சுற்றப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மூன்று தொடர்களையும் வென்று கோப்பையை கைப்பற்றியது. தற்போது நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் எதிரான டெஸ்ட் தொடரை 2-0  என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. இந்த 2 போட்டிகளில் ஒரு ஹாட்ரிக் விக்கெட் உட்பட 13 விக்கெட்டுகளை வீழ்த்தி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா அசத்தினார். இதன்மூலம் டெஸ்ட் தரவரிசைப்பட்டியலில் 3 இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இர்பான் பதான் பும்ராவை புகழ்ந்து பேசியுள்ளார். அதில், ‘இந்திய அணியில் பும்ரா இல்லாவிட்டால், அணிக்கு பெரும் இழப்பாக இருக்கும். இந்திய அணியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வீரர் பும்ரா. இவர் போன்ற வீரரால் இந்திய அணி ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி இவரை கவனமாக பார்க்க வேண்டும். இவர் போன்ற வீரர் மூன்று வகையான (டி20, ஒருநாள், டெஸ்ட்) போட்டிகளில் சாதிப்பது கடினமான விஷயம். பும்ரா டெஸ்ட் போட்டியில் எடுத்த ஹாட்ரிக் விக்கெட்டுடன் நின்றுவிடமாட்டார். இன்னமும் நிறைய ஹாட்ரிக் விக்கெட்டுகளை அவர் எடுப்பார்’ என இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

Tags : #BCCI #TEAMINDIA #CRICKET #BUMRAH