‘இதுவரை யாரும் இப்டி இருந்தது இல்லை’ முதல்முறையாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டனுக்கு அடித்த அதிர்ஷ்டம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Sep 04, 2019 06:37 PM
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புதிய தலைமை பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழு தலைவரை தேர்வு செய்துள்ளது.

நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றிலேயே வெளியேறியது. இதனால் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர், பௌலிங் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர்களை மாற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்தது. இதனை அடுத்து கடந்த வாரம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுகுழுவினர், புதிய பயிற்சியாளர்களை நியமிப்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் அவர் தேர்வுக்குழு தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை பயிற்சியாளரே தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்படுவது இதான் முதல்முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பௌலிங் பயிற்சியாளராக வக்கார் யூனுஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
