‘நோய் வந்தாப்புறம் குணப்படுத்துறத விட’.. ‘கொரோனா பற்றி கோலியின் பதிவு!’ .. ‘பரவும் ட்வீட்’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Mar 14, 2020 04:45 PM

கொரோனாவால் இந்தியா தென் - ஆப்பிரிக்கா இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, கொரோனா நோயைக் குணப்படுத்துவதை விட வரும் முன் தற்காத்துக் கொள்வதே சிறந்தது என்று தெரிவித்துள்ளார்.

prevention is better than cure, kohili tweets against corona

இதுபற்றி பேசிய கோலி, கொரோனா நோயினால் தாக்கப்பட்டுளோரின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருவதால் அனைவரும் பாதுகாப்பாகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என்று  தெரிவித்துள்ளார்.

இந்த நோய்த் தொற்றுக்கு எதிரான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து எடுக்க வேண்டும் என்றும் இந்த நோய்க்கு எதிராக போராட வேண்டும்

என்றும் கூறிய கோலி, இந்த நோய் வந்தபின் குணப்படுத்துவதை விட, வருவதற்கு முன்பாக தற்காத்துக் கொள்வதே சிறந்தது. ஆகையால் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

 

இதேபோல் இந்திய வீரர் கே.எல்.ராகுல், ‘சோதனை மிக்க இந்த காலகட்டத்தில் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்து கவனித்துக் கொள்வோம்’ என்றும் ‘சுகாதார நிபுணர்கள் நமக்காக தந்துள்ள விழிப்புணர்வு தகவல்களை எல்லாம் பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும்’

என்றும் கூறி ட்வீட் செய்துள்ளார்.

 

Tags : #VIRATKOHLI