VIDEO: 'SHUT THE *** UP' ரசிகர்களை 'கெட்ட' வார்த்தையில் திட்டி... மோசமாக 'சைகை' செய்த கேப்டன்... விளாசும் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Mar 02, 2020 12:52 PM

2-வது டெஸ்ட் போட்டியில் ஆக்ரோஷமாக நடந்து கொண்ட இந்திய கேப்டன் விராட் கோலி, ரசிகர்களை கெட்ட வார்த்தையால் திட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.

IND Vs NZ: Kohli reacts to crowd remarks, Video goes Viral

முதல் டெஸ்ட் போட்டியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து அணி, 2-வது டெஸ்ட் போட்டியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்தது. டி20 போட்டியில் ஒயிட் வாஷ் அடைந்த நியூசிலாந்து அணி ஒருநாள் தொடர், டெஸ்ட் தொடர் இரண்டிலும் இந்திய அணியை ஒயிட் வாஷ் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்திய அணியின் இந்த மோசமான தோல்வியால் ரசிகர்கள் இந்திய அணியையும், கேப்டன் விராட் கோலி உள்ளிட்டோரையும் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ரசிகர்களை விராட் கோலி கெட்ட வார்த்தையால் திட்டும் வீடியோ ஒன்று ட்விட்டரில் வைரலாகி வருகிறது. நியூசிலாந்து கேப்டன் கனே வில்லியம்சன் அவுட் ஆகி செல்லும்போது விராட் கோலி மிகவும் மோசமாக அவரை வழியனுப்பி வைத்தார்.

தொடர்ந்து முஹம்மது ஷமியின் பந்துவீச்சில் ஹென்றி நிகோலஸ் ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் அடித்த பந்தை கேட்ச் பிடித்த கோலி, ரசிகர்களை பார்த்து அமைதியாக இருக்கும்படி எச்சரித்து 'Shut The F*ck Up'  என ஆங்கிலத்தில் மோசமாகத் திட்டினார். இதுதவிர கூட்டத்தில் இருந்த ரசிகர்கள் சிலரை பார்த்து குடிகாரர்கள் என சைகை செய்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஒழுங்காக முதலில் விளையாடுங்கள், பிறகு எங்களைத் திட்டலாம் என கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

முன்னதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடரின்போது ரசிகர்களை பார்த்து கோலி நடுவிரலைக் காட்டி சைகை செய்தது குறிப்பிடத்தக்கது. அவுட் ஆன வீரர்களை மோசமாக வழியனுப்பி வைத்தது, ரசிகர்களை நோக்கி மோசமாக சைகை செய்தது ஆகிய காரணங்களால் ஐசிசி விராட் கோலிக்கு தடை விதிக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.