"விராட், இந்திய அணியின் தோல்விக்கு என்ன காரணம்?..." "போன தடவை என்ன சொன்னேன்?..." "பேட்ஸ்மேன்கள் சொதப்பிட்டாங்கன்னு சொன்னீங்க..." "அதேதான் இந்த தடவையும்..."
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தோல்வி குறித்து கேப்டன் விராட் கோலி விளக்கமளித்துள்ளார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் இன்று நிறைவடைந்தது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலி, 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியதாகக் குறிப்பிட்டார். அவர்கள் தொடர்ந்து இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தனர். எங்களுக்கான வாய்ப்பு கடைசிவரை கிடைக்கவில்லை எனக் கூறினார்.
மேலும், "சரியான திட்டமிடுதலும் செயல்படுதலும் எங்களிடம் இல்லை. நியூசிலாந்து பந்து வீச்சாளர்கள் எங்களை தவறு செய்ய வைத்தார்கள். பந்துவீச்சாளர்களை சமாளிக்கும் வகையில் நமது வீரர்கள் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை. பந்துவீச்சாளர்கள் எந்த அளவுக்கு சிறப்பாக செயல்படுகிறார்களோ, அதே அளவுக்கு சிறப்பாக செயல்படக்கூடிய பேட்டிங் யூனிட் நம்மிடம் இல்லாத போது வருத்தமாக இருந்தது. வெளிநாட்டில் வெற்றி பெற வேண்டுமென்றால் பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் சரியாக இருக்கவேண்டும். இந்த தவறுகள் எல்லாம் சரி செய்துகொண்டு அடுத்த போட்டிக்கு தயாராவதே எங்களது இலக்கு." எனத் தெரிவித்தார்.
