அவங்க 3 பேருக்கும் 'வயசு' ஆகிடுச்சு அதனால... அதிரடி திட்டம் குறித்து 'ஓபனாக' பேசிய கேப்டன்... 'யார' சொல்றாருன்னு பாருங்க!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Mar 04, 2020 07:54 PM

சமீபத்தில் நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டி20 தொடரை மட்டும் கைப்பற்றி ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரை இழந்தது. இதனால் இந்திய அணியின் பார்ம் குறித்தும், கேப்டன் கோலியின் தேர்வு குறித்தும் எக்கச்சக்கமான ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் ஆகியோர் கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Team India need new speed merchants, says Virat Kohli

இந்த நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஷமி, உமேஷ், இஷாந்த் ஆகிய மூவருக்கும் வயது ஆகி விட்டதால் இளம் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்ய வேண்டிய நேரம் நெருங்கி விட்டதாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், '' தற்போது விளையாடி வரும் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர்கள் இளம் வயதை கொண்டிருக்கவில்லை. இவர்களுக்கான மாற்று வீரர்களை தயார் செய்து அவர்களை எப்போது வேண்டுமென்றாலும் களத்தில் விளையாட வைக்க தயாராக இருக்க வேண்டும்.

அடுத்த மூன்று அல்லது நான்கு வேகப்பந்து வீச்சாளர்களை அடையாளம் காண்பது அவசியம். சில வீரர்கள் காயத்தால் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், அவர்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ள முடியும். இந்த மாற்றங்கள் நடக்கும் என்பது எங்கள் அணியில் உள்ளவர்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். நவ்தீப் சைனி எங்களது திட்டத்தில் உள்ளார். இன்னும் இரண்டு, மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மீது பார்வை உள்ளது. அவர்ளின் விளையாட்டு தரம் சர்வதேச அளவில் மிகவும் உயர்வாக இருக்க வேண்டும். அதை கவனமாக கையாள வேண்டியது அவசியம்,'' என தெரிவித்து இருக்கிறார்.

இதேபோல காயம் காரணமாக தற்போது ஓய்வில் இருக்கும் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமாருக்கும் 30 வயது ஆகி விட்டதால், வரும் காலங்களில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சுக்கு 26 வயதான பும்ரா தலைமை தாங்குவார் என கூறப்படுகிறது.