உலகின் 'தலைசிறந்த' வீரரை விட்டுட்டு... அவருக்கு ஏன் 'சான்ஸ்' குடுத்தோம்னா?... ரகசியம் 'உடைத்த' கேப்டன்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் தலைசிறந்த விக்கெட் கீப்பரான சஹாவை விடுத்து, இளம்வீரர் ரிஷப் பண்டிற்கு கேப்டன் கோலி வாய்ப்பு கொடுத்தார். அவரின் இந்த முடிவு கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்பினராலும் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் சஹாவை விடுத்து, பண்டிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்ட காரணத்தை கேப்டன் விராட் கோலி வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''தொடர்ச்சியாக ஒரு வீரர் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தால் அவரிடம் உள்ள தன்னம்பிக்கை குறையும். இதுதவிர இளம்வீரரான அவருக்கு வாய்ப்பை நாம் சரியான நேரத்தில் வழங்கும் போது, அவர் பிரகாசிப்பார் என்ற கருத்தினை கொண்டே அவருக்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கொடுத்தோம்.
இது மட்டுமின்றி தன்னுடைய குறைகளை நீக்கி பாசிட்டிவாக விளையாட அவர் நிறைய பயிற்சிகளையும் மேற்கொண்டார். எனவே நிச்சயம் இந்த டெஸ்ட் தொடரில் அவர் சாதிப்பார் என்றும் நம்ப அவருக்கு வாய்ப்பு அளித்தோம். ஆனால் ஒட்டுமொத்த இந்திய அணிக்கும் இது ஒரு மோசமான சுற்றுப்பயணமாக அமைந்தது,'' என்றார்.
