'அவரோட' காயத்துக்கு காரணம் நீங்க தான்... பிசிசிஐ 'அதிரடி' குற்றச்சாட்டு... சிக்கிக்கொண்ட மூத்த வீரர்?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Mar 05, 2020 11:19 PM

சமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது இஷாந்த் சர்மா காயத்தில் சிக்கினார். முதல் போட்டியில் 5 விக்கெட்டுகளை அதிரடியாக வீழ்த்திய அவர் 2-வது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக ஆடவில்லை. இது தற்போது மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதற்கு தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் ராகுல் டிராவிட் தான் காரணம் என பிசிசிஐ அதிகாரிகள் குற்றச்சாட்டி உள்ளனர்.

Rahul Dravid to take responsibility for blunders at NCA: BCCI

ரஞ்சி தொடரில் டெல்லி ஆடிவந்த இஷாந்த் சர்மா அந்த போட்டியின் போது காயமடைந்தார். அவரது காயத்தை பரிசோதித்த டெல்லி மாநில கிரிக்கெட் அணியின் பிசியோதெரபிஸ்ட் காயம் குணமாக சுமார் 6 வார காலமாகும் என அறிக்கை அளித்தார். இதையடுத்து தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை எடுக்க இஷாந்த் சர்மா சென்றார். அங்கு அவருக்கு  தீவிர பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதையடுத்து 3 வாரங்களில் இஷாந்தின் காயம் குணமானதாக அறிவிக்கப்பட்டு நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் இணைந்தார்.

முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடிய இஷாந்த் 2-வது போட்டியில் இருந்து காயம் காரணமாக விலகினார். இந்த நிலையில் தேசிய கிரிக்கெட் அகாடமி எந்த அடிப்படையில் அவருக்கு கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் விளையாடலாம் என அறிக்கை அளித்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் ராகுல் டிராவிட் மற்றும் பிஸியோதெரபிஸ்ட் ஆஷிஷ் கவுசிக் ஆகியோர் மீது தற்போது விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் பிசிசிஐ அதிகாரிகள் இதுகுறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

முன்னதாக இந்திய அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான புவனேஸ்வர் குமார் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று இந்திய அணியில் விளையாடினார். ஆனால் குடலிறக்க பிரச்சினை காரணமாக அவர் தொடரின் பாதியிலேயே விலகினார். இதன் காரணமாக தேசிய கிரிக்கெட் அகாடமி கடும் விமர்சனங்களை அப்போது சந்தித்தது. இந்த நிலையில் தற்போது இஷாந்த் சர்மா காயத்தில் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. மறுபுறம் இந்திய அணியின் இளம்வீரர்களான பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் தேசிய கிரிக்கெட் அகாடமி சென்று பயிற்சிகளை மேற்கொள்ளாமல்தனிப்பட்ட முறையில் பயிற்சி எடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.