‘இந்தியா வரட்டும் இருக்கு’... ‘எனக்கு சிரிப்பு தான் வருது’... ‘கடுப்பான’ கோலியை ‘சீண்டிய’ பிரபல வீரர்...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Mar 04, 2020 07:29 PM

டெஸ்ட் தோல்விக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை மிட்சல் ஜான்சன் கிண்டல் செய்துள்ளார்.

Mitchell Johnson Takes A Dig At Virat Kohli for His Statement

நியூசிலாந்தில் நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2 - 0 என்ற கணக்கில் படுதோல்வியடைந்துள்ளது. இந்தத் தொடரில் கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் மோசமான திறனை வெளிப்படுத்திய விராட் கோலி மீதும், இந்திய அணி மீதும் கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முன்னதாக 2வது டெஸ்ட் போட்டியின்போது, மைதானத்திலிருந்த நியூசிலாந்து ரசிகர்களை நோக்கி, “அவர்கள் (நியூசிலாந்து) இந்தியா வரட்டும். அப்போது நாங்கள் யாரென்று காட்டுகிறோம்” எனக் கூறி விராட் கோலி தகாத வார்த்தைகளால் திட்டியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதனை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஜான்சன், “இது எனக்கு சிரிப்பை வரவழைக்கிறது” என விராட் கோலியை கிண்டல் செய்துள்ளார்.

Tags : #CRICKET #VIRATKOHLI #INDVSNZ #MITCHELLJOHNSON