பந்தை 'சொழட்ட' தெரியாதவங்க எல்லாம் 'ஸ்பின்னராம்'... என்ன பொசுக்குன்னு 'இப்டி' சொல்லிட்டாரு... யாருப்பா அது?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை, இந்திய அணியின் மூத்த வீரரும் சென்னை அணிக்காக விளையாடி வருபவருமான சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், '' ஜலஜ் சக்சேனா என்னும் வீரர் முதல்தர கிரிக்கெட்டில் 347 விக்கெட்டுகளைக் கைப்பற்றி 6334 ரன்கள் குவித்துள்ளார். வஹாரே என்னும் வீரர் முதல்தர கிரிக்கெட்டில் 279 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். தொடர்ந்து நிலையாக பந்துவீசி வருகிறார். ஆனால் இவர்களை தேர்வுக்குழுவினர் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர்.
அப்புறம் நீங்கள் சொல்கிறீர்கள் இந்திய அணியில் ஸ்பின்னர்கள் குறைந்து கொண்டே வருகிறார்கள் என்று. பந்தையே சுழற்றாத வாஷிங்டன் சுந்தருக்கு இந்திய அணியில் அடிக்கடி வாய்ப்பு வழங்குகிறார்கள். அதற்கு என்ன காரணம் என்று எனக்கு புரியவில்லை. சுந்தரால் ஓரளவுக்கு பேட்டிங் செய்ய முடியும் என்றால் அவரை விட நன்றாக பந்து வீசும் ஜலஜ் கூட நன்றாக பேட்டிங் செய்வாரே?
ஜலஜ் சக்ஸேனா, வஹாரே போன்ற பவுலர்களுக்கு நம்பிக்கை அளித்து அவர்களை நீங்கள் உருவாக்க வேண்டும். சக்ஸேனா என்ன தவறு செய்தார் என்பது எனக்கு தெரிந்தாக வேண்டும். விக்கெட்டுகள் எடுப்பதன் மூலம், சக்ஸேனா, வஹாரே, ஷாபஸ் நதீம் ஆகியோர் குற்றம் செய்துவிட்டதாக நினைக்கிறீர்களா?'' என்று ஹர்பஜன் சிங் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
