என்ன ஒரு 'துல்லியமான' 'கர்லிங் ஃபிரி கிக்...' 'வளைந்து' வந்து 'இலக்கை' தாக்கிய 'கால்பந்து...' 'ஆசிய கால்பந்து' கூட்டமைப்பு பகிர்ந்த 'வைரல் வீடியோ...'
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடேவிட் பெக்காம் ஸ்டைல் கர்லிங் ஃப்ரீ-கிக் அடித்த இந்தியவீரரின் வீடியோ வைரலாகி உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக உலகம் முழுவதும் விளையாட்டு போட்டிகளும் , பயிற்சிகளும் பெரும் அளவு பாதிக்கப்பட்டு உள்ளன.
வைரஸ் பரவல் காரணமாக அனைத்து முக்கிய கால்பந்து லீக்குகளும் மார்ச் மாதம் முதல் நிறுத்தப்பட்டன. இருப்பினும், சமீபத்தில் ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் மெதுவாக மீண்டு வருகிறது. வீரர்கள் பல்வேறு பகுதிகளில் தங்களது பயிற்சியைத் தொடங்கியுள்ளனர்.
பயிற்சியின் போது வீரர் ஒருவர் டேவிட்பெக்காமின் கர்லிங் ஃபிரீ கிக் ஒன்றை மிகத் துல்லியமாக அடித்தார். இதன் மூலம் எதிரே இருந்த வீரர் ஒருவரின் தலையில் இருந்த தண்ணீர் பாட்டிலை துல்லியமாக கீழே விழ வைத்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
Precision level 9999 🎯🔥
📍 India 🇮🇳 pic.twitter.com/7xFwucamNA
— AFC (@theafcdotcom) June 7, 2020
முன்னாள் இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் தனது கர்லிங் ஃப்ரீ-கிக்ஸால் பிரபலமானவர், இது எதிர் அணியின் கோல்கீப்பர்களைத் திணறவைக்கும் அளவுக்கு அசாத்தியமான ட்ரிக் கிக் ஆகும். அது போல் நம்பமுடியாத துல்லியமான ஃப்ரீ-கிக் வீடியோதான் தற்போது வைரலாகி உள்ளது, இந்த வீடியோவை ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (AFC) பகிர்ந்து உள்ளது இதுநிச்சயமாக பெக்காமைக் கூட ஈர்க்கும் என்றே எதிர்பார்க்கலாம்.

மற்ற செய்திகள்
