'உணவு தேடி வந்த சிங்கம்...' 'பள்ளிக்குள் புகுந்ததால் பரபரப்பு...' 'வைரலாகும் வீடியோ...'

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | May 07, 2020 11:19 AM

குஜராத் மாநிலத்தில் சிங்கம் ஒன்று உணவு தேடி ஊருக்குள் வந்தபோது அங்கிருந்த பள்ளிக்கூட அறையில் மாட்டிக் கொண்ட சம்பவம் சமீபத்தில் நடைபெற்றுள்ளது.

lion enters gujarat school video gone viral on twitter

குஜராத் மாநிலம் பஸ்வாலா என்ற கிராமத்திற்குள் சிங்கம் ஒன்று உணவு தேடி வந்துள்ளது. அப்பொழுது விவசாயி ஒருவரின் கால்நடை மந்தைக்குள் சென்ற சிங்கத்தை அங்கிருந்தவர்கள் விரட்டியுள்ளனர். இதனால் மிரண்ட சிங்கம் எப்படியோ இந்த பள்ளிக்குள் சென்று மாட்டிக்கொண்டது.

இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்ததையடுத்து, விரைந்த வந்த அவர்கள், சிங்கத்தை பிடிக்க கூண்டு ஒன்றை தயார் செய்தனர். பின்னர் பள்ளியின் வாசலில் கூண்டை வைத்து சிங்கத்தை லாவகமாக கூண்டுக்குள் அடைத்தனர். இதையடுத்து, சிங்கத்தை அடர்ந்த காட்டிற்குள் கொண்டு விட்டனர்.

இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா வெளியிட்ட வீடியோவில் ஒரு ஜன்னலின் வழியாக சிங்கம் ஒன்று எட்டி பார்க்கிறது. அதை பிடிப்பதற்காக வெளியே வனத்துறையினர் ஒரு கூண்டை தயார் செய்து வருகின்றனர். இதை அவர் "பள்ளிக்கு வந்த சிங்கம் தன்னையும் சேர்த்துக்கொள்ளும் படி கேட்டுள்ளது". என பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது.