கேரளாவில் அரங்கேறிய மற்றுமொரு கொடூரம்...! 'பசியால துடிச்சிட்டு இருந்துருக்கு...' 'கட்ட அவிழ்த்தப்போ கடகடன்னு...' நாய் வாயை கட்டிய வேதனை சம்பவம்... !

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Jun 08, 2020 04:56 PM

கேரளாவில் தெரு நாயின் வாய் பகுதியில் டேப் போட்டு கட்டியுள்ள செய்தி மீண்டும் விலங்குகளின் மீது அக்கறை உள்ளோரை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

unknown person sealed street dog nose by tape in Kerala

கடந்த சில நாட்களாகவே விலங்குகளின் மீது கட்டவிழ்க்கப்படும் வன்முறைகள் மனித இனத்தின் மனிதநேயத்தினை கேள்விக்குறியாக்கும் வகையில் உள்ளது. கர்ப்பிணி யானை வெடி வைத்த அன்னாசி பழத்தை உண்டது, கர்ப்பிணி பசு வெடிப்பொருள் கலந்த கோதுமை மாவு கலவையை சாப்பிட்டதை தொடர்ந்து தற்போது தெரு நாயின் குரைக்கும் சத்தம் பொறுக்காமல் அதன் வாயில் இறுக்கி டேப் ஒட்டப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

பிற உயிரினங்களை விட நாய் எப்போதும் நன்றியுள்ள, பாசமுள்ள ஒரு ஜீவனாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் இரண்டு வாரங்களுக்கு முன்பு கேரளாவில் தெருநாய் ஒன்று வாயில் டேப்புடன் எதுவும் சாப்பிட முடியாமல் தெருவில் அலைந்து திரிந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் திருச்சூர் விலங்குகள் நல அமைப்புக்கு போன் வந்துள்ளது.

அப்போது ஒல்லூர் பகுதியில் தெருநாய் ஒன்று அதன் வாயில் டேப் ஒட்டப்பட்டு சுற்றி வருகிறது எனவும், அதனால் எதனையும் சாப்பிட முடியவில்லை என்றும் தகவல் தெரிவித்துள்ளனர். தெருநாய் இருந்த இடத்திற்கு விலங்கு நலத்துறையினர் வந்தும் நாயை கண்டுப்பிடிக்க முடியவில்லை.

தெரு நாய் குரைத்துக் கொண்டே இருப்பதால் இது போன்று செய்துள்ளனர் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது இரண்டு வாரங்களுக்கு பின் பாதிக்கப்பட்ட  நாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாயின் வாயில் டேப் இறுக்கி பல சுற்றுகளாக சுற்றி ஒட்டப்பட்டதால் அதன் நாசி எலும்புகள் முறிந்து போயுள்ளன. மேலும், அதனால் வாயை திறக்க முடியாமல், உணவு சாப்பிட முடியாமல் தவித்துள்ளது.

டேப் ஆனது வாயின் தோல் பகுதியின் ஆழத்திற்கு சென்று காயம் ஏற்பட்டுள்ளது. நாயினை மீட்ட விலங்குகள் நல அமைப்பினர் டேப்பை அறுத்தெடுத்தவுடன் சுமார் 2 லிட்டர் தண்ணீரை அந்த நாய் குடித்ததாக விலங்குகள் நல அமைப்பின் செயலாளர் ராமச்சந்திரன் நியூஸ்மினிட் இணையதளத்திடம் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் நாயினால் உணவு , தண்ணீர் இல்லாமல் நாய்களால் சில வாரங்கள் வாழ முடியும். தற்போது நாய் மருத்துவ சிகிச்சையால் உடல்நிலை முன்னேறி வருகிறது. இனிமேலாவது சிலர் மனிதர்கள் போல் நடக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Tags : #ANIMALS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Unknown person sealed street dog nose by tape in Kerala | India News.