இந்த நிலைமை எந்த 'பொண்ணுக்கும்' வரக்கூடாது... 'வீல் சேரில்' வைத்தே... 'கர்ப்பிணி' பெண்ணிற்கு நடந்த 'பிரசவம்'... இறுதியில் நடந்தேறிய 'கொடுமை'!
முகப்பு > செய்திகள் > இந்தியாமேற்கு வங்க மாநிலம் அசன்சோல் மாவட்டத்தில் வீல் சேரில் குழந்தை பெற்ற கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த உயிரிழப்பு குறித்து கர்ப்பிணி பெண்ணின் கணவர் கூறுகையில், 'இரண்டு நாட்களுக்கு முன்னதாக எனது கர்ப்பிணி மனைவியை சிகிச்சைக்கு வேண்டி அசன்சோல் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தேன். ஆனால் இங்கு ஒரே கட்டிலில் 4,5 பேரை அனுமதித்திருந்தனர். சமூக இடைவெளியையும் சரிவர கடைபிடிக்கவில்லை' என தெரிவித்துள்ளார்.
அவர் இதுகுறித்து மேலும் கூறுகையில், 'இரண்டு நாட்களுக்கு முன் மருத்துவர் ஒருவர் எனது மனைவிக்கு சிசேரியன் சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமென கூறினார். பின்னர் பிரசவ அறைக்கு வீல் சேரில் எனது மனைவியை கொண்டு சென்றனர். அதன்பிறகு, அதில் வைத்தே பிரசவம் பார்த்துள்ளனர். இதனால் கடும் வேதனையில் எனது மனைவி தவித்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு எனது மனைவி உயிரிழந்தார். மருத்துவர்களின் அலட்சியத்தால் தான் இந்த கொடிய சம்பவம் நிகழ்ந்தது. மருத்துவமனையில் வென்டிலேட்டர் வசதியும் இல்லை' என தெரிவித்துள்ளார்.
முன்னதாக மருத்துவர் ஒருவர் அங்கிருந்த கர்ப்பிணி பெண்கள் சிலரிடம் ஊரடங்கு சமயத்தில் ஏன் குழந்தையை பெற்றெடுக்க திட்டமிட்டனர் என கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
