'துணி மாஸ்க் யூஸ் பண்றது வேஸ்ட்...' 'இந்தெந்த மாஸ்க் எல்லாம் உபயோகிக்கலாம்...' உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸை விட்டு விலகி இருக்க சாதாரண துணி முகக்கவசம் பயன்படுத்தி எந்த உபயோகமும் இல்லை என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
உலக அரசுகள் அனைத்தும் தற்போது தடுமாறி வருவது கொரோனா வைரஸிற்கு மட்டும் தான் என சொன்னால் அது மிகையாகாது. விஞ்ஞானிகளும், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஒருபுறம் மருந்து கண்டுப்பிடிப்பதில் தீவிரம் காட்டிவரும் இந்த சூழலில் நாம் நம்மை கொரோனா வைரஸிலிருந்து தற்காத்து கொள்ள தீவிர நடவடிக்கைகளை எடுப்பதும் அவசியம்.
கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்து கண்டுபிடிக்காத இந்த சூழலில் நம்மை தற்காத்து கொள்ள உதவும் ஆயுதங்கள் மாஸ்க் அணிவதும், சமூக இடைவெளியை பின்பற்றுவதும், கைகளை அடிக்கடி சுத்தம் செய்வதும் ஆகும். அதுவும் தற்போது விதவிதமான மாஸ்க்கள் விற்கப்பட்டு வரும் சூழலில் துணி மாஸ்க்களால் கொரோனோவை கட்டுப்படுத்த முடியாது என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
சாதாரண துணியால் தயாரிக்கப்பட்ட முகக்கவசம் அணிவதால் கொரோனா வைரசை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது, இது போன்ற மாஸ்க்கள் சமூக இடைவெளி சரியாக பின்பற்றப்படும் இடங்கள், வாகனங்களில் பயணம் செய்வது போன்ற நேரங்களில் மட்டுமே இது உதவ கூடும் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
மேலும் நுரையீரல் நோய், இருதய நோய், நீரிழிவு, புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களும், வயதானவர்களும் கண்டிப்பாக மருத்துவ ரீதியான முகக்கவசம் தான் அணிய வேண்டும், துணி மாஸ்க்கள் அவர்களுக்கு பலனளிக்காது. பேப்ரிக்கால் தயாரிக்கப்பட்ட முகக்கவசத்தால் தான் கிருமியை தடுக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளது உலக சுகாதார நிறுவனம்.