நல்லபடியா 'தூங்கிட்டு' இருந்தாங்க... வீட்டுக்காரரே 'பொண்டாட்டி', 'புள்ளைங்க' மேல 'தீ' வெச்சுட்டாரு... சென்னையை உலுக்கிய 'கோரம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொல்கத்தாவை சேர்ந்தவர் மகாபுல் அலி (40). இவரது மனைவி பெயர் கொரோசா பேகம் (40). இந்த தம்பதிக்கு அக்ரம் அலி(21) என்ற மகனும், மஜி(13) என்ற மகளும் உள்ளனர்.

இவர்கள் கடந்த சில ஆண்டுகளாக மதுரவாயல் அடுத்த புளியம்பேடு அருகே நூம்பல் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், மகாபுல் மற்றும் கொரோசா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக கணவரை வீட்டில் சேர்க்காமல் தனது மகன் மற்றும் மகளுடன் கொரோசா பேகம் தனியாக வசித்து வந்துள்ளார்.
இதனையடுத்து நேற்று அதிகாலை கொரோசா வீட்டில் அலறல் சத்தம் கேட்ட நிலையில் அக்கம் பக்கத்தினர் பதறியடித்து கொண்டு ஓடினர். அப்போது மூவரின் உடலில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த நிலையில் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றவர்கள், அவர்கள் உடலில் எறிந்த தீயை அணைத்தனர். கொரோசா மற்றும் அக்ரம் அலி ஆகியோர் பலத்த காயமடைந்த நிலையில் மகள் மஜிக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
மூன்று பேரையும் உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் தாய் கொரோசா மற்றும் மகன் அக்ரம் அலி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், மகாபுல் அலிக்கு குடிப்பழக்கம் இருந்த நிலையில் அவர் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமலும், பணம் கொடுக்காமலும் இருந்து வந்துள்ளார். அதே போல தனது மனைவியின் மீதும் சந்தேகப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனால் தனது கணவரை வீட்டில் சேர்க்காமல் தனது மகன் மற்றும் மகளுடன் கொரோசா வாழ்ந்து வந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னதாக மகாபுல் அலி வீட்டிற்கு வந்து மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவரை வீட்டில் சேர்க்க கொரோசா மறுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த மகாபுல் அலி, ஜன்னல் வழியாக 3 பேர் மீதும் பெட்ரோல் ஊற்றி அவர்கள் மீது தீ வைத்து விட்டு தப்பியோடியுள்ளார். இந்த விபத்தில் வீடு முழுவதும் தீ பிடித்த நிலையில், தாய் மற்றும் மகன் ஆகியோர் படுகாயங்களுடன் உயிரிழந்தனர். மகள் மஜி மட்டும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
குடும்ப தகராறில் தனது மனைவி மற்றும் பிள்ளைகள் மீது தீ வைத்து தந்தை தப்பியோடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
