'ஷூவைக் காட்டி'..தென் ஆப்பிரிக்க வீரர் தவானை அவமானப்படுத்தினாரா?..நடந்தது என்ன?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Sep 27, 2019 11:07 AM

இந்தியா-தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிய 3-வது டி20 போட்டி பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நடந்தது.இதில் இந்தியா பேட்டிங் செய்தபோது ஷிகர் தவான் அவுட்டை தென் ஆப்பிரிக்க வீரர் ஷம்சி கொண்டாடிய விதம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

No Disrespect For Shikhar Dhawan, Says Tabraiz Shamsi

தவான் அவுட் ஆனதும் ஷம்சி ஷூவை அவிழ்த்து காதில் வைத்து அவரின் விக்கெட்டைக் கொண்டாடினார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.ஷம்சியின் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் பறக்கவிட்ட தவான் 36 ரன்கள் எடுத்த நிலையில் அவரின் பந்திலேயே அவுட் ஆனார்.இதைத்தொடர்ந்து தான் ஷம்சி அவ்வாறு நடந்து கொண்டார்.

 

இதனால் அவர் தவானைத் தான் அவமானப்படுத்தினார் என,விமர்சனங்கள் எழுந்தன. இந்தநிலையில் ஷம்சி அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.இதுகுறித்து அவர்,''நான் இம்ரான் தாஹீரின் மிகப்பெரிய ரசிகன்.நான் விக்கெட் எடுத்ததை அவரிடம் தொலைபேசியில் தெரிவிப்பது போல பாவனை செய்தேன்,''என கூறியிருக்கிறார்.

 

தொடர்ந்து தவானுடன் தான் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு,''எந்த அவமரியாதையும் இல்லை.வெறும் அன்பு மட்டும் தான்.ஏன் எனக்கு வார்னிங் கொடுக்காமல் இரண்டு சிக்ஸர்கள் அடித்தீர்கள்?,''என ட்வீட் செய்திருக்கிறார். 

Tags : #CRICKET