தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட 'ரூபா குருநாத்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Sep 26, 2019 01:28 PM

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் மற்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவரான என்.சீனிவாசனின் மகள் ரூபா குருநாத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Rupa Guranath unanimously elected as new TNCA president

மாநில கிரிக்கெட் சங்கங்களில் பெண் ஒருவர் தலைவராக பொறுப்பேற்பது இதுவே முதல் முறை.  முன்னதாக அனைத்து மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் பொதுக்குழு கூட்டத்தை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் இன்று நடத்தியபோது ரூபா குருநாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகத்தில் 70 வயதைக் கடந்தவர்கள் பதவியில் இருக்கக் கூடாது மற்றும் தொடர்ந்து ஒருவரே 2 முறை பதவி வகிக்கும் பட்சத்தில் ஒருவருட கால இடைவெளிக்கு பின்னரே பதவியில் அமர வேண்டும் உள்ளிட்ட பல புதிய விதிமுறைகளை லோதா கமிட்டி பரிந்துரைத்திருந்தது.

இதன் அடிப்படையில், மாநில கிரிக்கெட் சங்கங்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தேர்தல்கள் நடத்தப்பட முடிவு செய்யப்பட்டது. இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தல் அடுத்த மாதம் 23-ஆம் தேதி நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : #CRICKET #TNCA #RUPAGURUNATH