மூளையைப் பயன்படுத்து ..இளம்வீரரைத் 'திட்டிய' ஹிட்மேன்..வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Sep 26, 2019 02:02 PM

இந்தியா-தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிய 3-வது டி20 போட்டியில்,துணை கேப்டன் ரோஹித் ஷர்மா இளம்வீரர் நவ்தீப் சைனியைத் திட்டிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Rohit Sharma loses cool ask Navdeep Saini To Use His Brain

போட்டியின்போது முதலில் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்தது.அப்போது 12-வது ஓவருக்கு முன்பாக கேப்டன் விராட் கோலி களத்தை விட்டு வெளியேறினார். தொடர்ந்து துணை கேப்டன் ரோஹித் ஷர்மா அணியை வழிநடத்தினார்.12-வது ஓவரை இளம்வீரர் நவ்தீப் சைனி வீசினார்.

 

அவரது ஓவரின் 4-வது பந்தில் தென் ஆப்பிரிக்க வீரர் பவுமா பவுண்டரி அடித்தார். தொடர்ந்து சைனியின் 5-வது பந்திலும் பவுமா பவுண்டரி அடிக்க,கடுப்பான ரோஹித் மூளையை கொஞ்சமாவது பயன்படுத்து என்னும் வகையில்,சைகையில் தலையைத் தொட்டுக்காட்டி திட்டினார்.

 

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.சைனி தான் வீசிய 2 ஓவர்களிலும் 25 ரன்களை வாரி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #CRICKET