அவுட்டா? நானா?...அதெல்லாம் இல்ல..மறுபடியும் 'பந்து' போடுங்க!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Sep 25, 2019 07:51 PM

கூல் கேப்டன் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் தோனி,தற்போது கிரிக்கெட் போட்டிகளுக்கு தற்காலிக விடுமுறை அளித்துள்ளார்.எனினும் அவர் என்ன செய்தாலும் அது வைரலாகி விடுகிறது.தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை தோனி பதிவிட அது தற்போது வைரலாகி வருகிறது.

 

MS Dhoni Shared a Street Cricket Video On Instagram

அந்த வீடியோவில் தெருவில் சிலர் கிரிக்கெட் விளையாடுவது போல உள்ளது.அதில் ஒருவர் கிரிக்கெட் விளையாடி அவுட் ஆகிறார்.ஆனால் தனது அவுட்டை அவர் ஒத்துக்கொள்ளவில்லை.தொடர்ந்து 2-வது முறையாக அவருக்கு பந்து போடுகின்றனர்.அப்போதும் அவர் அவுட் ஆகிவிடுகிறார்.

 

இந்த வீடியோ குறித்து தோனி,''போதிய வெளிச்சம் இல்லை,மன்னிக்கவும்.நாம் எல்லோரும் இதுபோல டிரையல் பால்,அம்பயர் தீர்ப்புகளை கடந்து வந்திருப்போம். பள்ளி நினைவுகளை இது மீண்டும் கொண்டு வருகிறது,''என தெரிவித்துள்ளார்.இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.இதுவரை சுமார் 18 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர்.