‘ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல்’... ‘அதிரடியாக இடம் பிடித்த இந்திய வீரர்கள்’... ‘ஆனாலும் 3-வது இடத்துக்கு இறங்கிய இந்திய அணி’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Dec 15, 2020 09:23 PM

ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் 3 இந்திய வீரர்கள் டாப் 10-ல் இடம் பெற்றுள்ளனர்.

Kohli climbs to 2nd spot, Pujara, Rahane also feature in top-10

ஐசிசி டெஸ்ட் போட்டிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 886 புள்ளிகளுடன் ஒரு இடம் மேலேறி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 911 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள நிலையில், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது போட்டியில் விளையாடாத நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 877 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார்.

இவரைத் தொடர்ந்து மார்னஸ் லாபுசாக்னே 827 புள்ளிகளுடனும், பாபர் அசாம் 797 புள்ளிகளுடனும் அடுத்தடுத்த இடங்களில் தொடர்கின்றனர். இந்தப் பட்டியலில் இந்திய வீரர்கள் சத்தீஸ்வர் புஜாரா 7-வது இடத்தில் 766 புள்ளிகளுடனும் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் அஜிங்க்யா ரஹானே 726 புள்ளிகளுடன் 10-வது இடத்திலும் இடம் பெற்றுள்ளனர். கடந்த சில மாதங்களாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத நிலையிலும் முதல் 10 இடங்களில் இந்திய வீரர்கள் மூவர் இடம்பெற்றுள்ளனர்.

டெஸ்ட் தரவரிசையின் பௌலர்கள் பட்டியலில் 8-வது மற்றும் 10-வது இடங்களில் இந்திய வீரர்கள் ஜஸ்பிரீத் பும்ரா 779 புள்ளிகளுடனும், ரவிசந்திரன் அஸ்வின் 756 புள்ளிகளுடனும் இடம் பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவின் பாட் கமின்ஸ் 904 புள்ளிகளுடன் முதலிடத்தை பெற்றுள்ளார். இதேபோல ஆல்-ரவுண்டர்கள் பட்டியலில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளார்.

இந்திய வீரர் ஜடேஜா 3-வது இடத்தையும் அஸ்வின் 6-வது இடத்தையும் பிடித்துள்ளனர். இந்தப் பட்டியலில் 2-வது இடத்திலிருந்து 114 புள்ளிகளுடன் ஒரு இடம் கீழே இந்திய அணி இறங்கியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் நியூசிலாந்து 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kohli climbs to 2nd spot, Pujara, Rahane also feature in top-10 | Sports News.