‘இந்த புகைப்படத்த பாருங்க’... ‘‘இவர மாதிரி இருக்க கத்துக்கோங்க’... ‘இந்திய வீரரை புகழ்ந்து தள்ளிய’... ‘பாகிஸ்தான் முன்னாள் வீரர்’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணி வீரர் ஹர்திக் பாண்ட்யா, சக வீரரான நடராஜனுக்கு தொடர் ஆட்ட நாயகன் விருதை வழங்கியதை பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ட்விட்டரில் பாராட்டி உள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அறிமுகமான தமிழக வீரர் நடராஜன், அந்தப் போட்டியிலும், அதற்கு அடுத்து வந்த டி20 தொடரிலும், பவர் பிளேயில் யார்க்கர் திறமையால் விக்கெட் எடுத்து அசத்தினார். அவரை சக வீரரும், மூத்த ஆல் ரவுண்டர் வீரருமான ஹர்திக் பாண்ட்யா, நடராஜனுக்கு களத்தில் அறிவுரை வழங்கியதோடு, தொடர்ந்து நட்பு பாராட்டி வந்தார். இந்த செயல் தனி கவனம் பெற்றது.
மேலும் டி20 தொடரில் தனக்கு கொடுத்த தொடர் ஆட்ட நாயகன் விருதை, இந்த விருதுக்கு பொருத்தமானவர் நடராஜன் தான் என்று கூறி, அந்த கோப்பையை கொடுத்து ரசிகர்களின் மனதை வென்றார். அதேபோல் கேப்டன் விராட் கோலியும் டி20 தொடருக்கான வெற்றி கோப்பையை நடராஜனிடம் கொடுத்தார். இவர்கள் இருவரின் செயல் பலரின் பாராட்டுகளை பெற்றது.
இந்நிலையில் இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்ட்யா, சக வீரர் நடராஜனுக்கு தொடர் நாயகன் விருதை வழங்கியதை பாகிஸ்தானின் முன்னாள் ஜாம்பவான் வீரர் பாராட்டி உள்ளார். முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா இந்த சம்பவத்தை குறிப்பிட்டு பாகிஸ்தான் வீரர்களை விமர்சனம் செய்துள்ளார்.
‘இந்திய வீரர் பாண்ட்யா தொடர் நாயகன் விருது பெற்று, அந்த விருதை இளம் வீரர் நடராஜனுக்கு அளித்துள்ளார். விருதை வென்றது மட்டுமின்றி, மக்களின் மனதையும் ஹர்திக் பாண்ட்யா வென்றுள்ளார். இந்த புகைப்படம் பார்க்கவே அழகாக உள்ளது. இளைஞர்களை இப்படித்தான் ஊக்குவிக்க வேண்டும். அவர்களுக்கு இப்படித்தான் வாய்ப்பு அளித்து முன்னேற்ற வேண்டும். ஆனால் பாகிஸ்தானில் அப்படி நடப்பது இல்லை. பாகிஸ்தான் வீரர்கள் சிலர் தங்களைப் பற்றியே நிறைய யோசிக்கிறார்கள். இளைஞர்களை பற்றி பாகிஸ்தான் வீரர்கள் யோசிப்பதே இல்லை’ என்று புகைப்படத்துடன் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
Great Pic can not be better ,#HardikPandya wins the hearts winning the man of the series but gives to Natarjan ,youngster must be delighted and motivated.hamaray Kisi player ney ahsa Kia khabi sub apna sochthay hai pic.twitter.com/UUSIxYmqbU
— Danish Kaneria (@DanishKaneria61) December 13, 2020