‘இவருதான் பெஸ்ட் வீரர்! உலகக்கோப்பைல கலக்குவாரு பாருங்க’!.. பிரபல வீரரை புகழ்ந்த ரவி சாஸ்திரி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Arunachalam | May 22, 2019 02:02 PM

உலக கோப்பை தொடரில் தோனியை விட சிறந்த வீரர் யாரும் கிடையாது என இந்திய அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

Ravi shastri praises dhoni and says he is the best player in our team

உலக கோப்பை தொடர் வரும் 30 ஆம் தேதி இங்கிலாந்தில் துவங்கவுள்ள நிலையில், இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. மேலும், இத்தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதனையடுத்து, இந்த உலக கோப்பை தொடர் இந்திய அணிக்கு சவாலான தொடராகவே இருக்கும் என முன்னாள் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் பலரும் கூறியுள்ளனர்.

இந்நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இந்திய அணியின் மூத்த வீரரும், விக்கெட் கீப்பருமான தோனியை புகழ்ந்துள்ளார். அதில் ‘இந்த உலகக்கோப்பை தொடரில் தோனியின் பங்கு மிக முக்கியமானது. கடந்த சில ஆண்டுகளாக கீப்பிங்கில் சிறந்து விளங்குகிறார் தோனி. அவரைவிட சிறந்த விக்கெட் கீப்பர் வேறு யாரும் இல்லை.

கேட்ச் பிடிப்பதில் மட்டுமல்ல, ஸ்டெம்பிங், ரன் அவுட் செய்வது என அனைத்திலும் சிறந்து விளங்கிறார். ஆட்டத்தின் முடிவை மாற்ற அவரின் பங்களிப்பு மிகவும் உதவுகிறது. இந்நிலையில், அவரை விட சிறந்த வீரர் யாரும் இல்லை’ என்று கூறியுள்ளார்.

மேலும், 12 வது ஐபிஎல் தொடரில் அவருடைய பேட்டிங்கை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. இந்த உலகக் கோப்பை தொடரில் மிக முக்கியமான வீரர்களில் தோனியும் ஒருவர். இந்நிலையில், இந்த உலகக்கோப்பை தொடர் மிகவும் சவாலான ஒன்றாக இருக்கும் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

Tags : #ICCWORLDCUP2019 #MSDHONI #RAVISHASTRI