‘பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவுடன் மோதபோவது யார்’?.. அட்டவணையை வெளியிட்டது ஐசிசி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Arunachalam | May 22, 2019 11:00 AM
உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் குறித்த அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வருகின்ற 30 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதனையடுத்து உலக கோப்பையில் விளையாடவுள்ள 10 அணிகளும் இங்கிலாந்தில் முகாமிட்டுள்ளனர். இதில், இந்திய அணியும் நேற்று இங்கிலாந்திற்கு கிளம்பி சென்றுள்ளது.
இந்நிலையில், உலக கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்திற்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில், இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் 2 அணிகளை எதிர்கொள்கிறது. இதனையடுத்து, இந்திய அணி வருகின்ற 25 ஆம் தேதி நடக்கும் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்தையும், மே 28 ஆம் தேதி வங்கதேசத்தையும் எதிர்கொள்கிறது.
மேலும், உலக கோப்பைக்கான பயிற்சி ஆட்டம் வருகின்ற மே 24 முதல் 28 ஆம் தேதி வரை நடக்கிறது. இதில், ஒவ்வொரு அணியும் இரண்டு போட்டிகளில் விளையாடவுள்ளது.
போட்டி அட்டவணை
மே 24: பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான்
இலங்கை vs தென் ஆப்ரிக்கா
மே 25: இங்கிலாந்துvs ஆஸ்திரேலியா
இந்தியா vs நியூசிலாந்து
மே 26: தென் ஆப்ரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ்
பாகிஸ்தான்vs வங்கதேசம்
மே 27: இங்கிலாந்து vs ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலியா vs இலங்கை
மே 28: இந்தியாvs வங்கதேசம்
நியூசிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ்
இந்நிலையில், மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பயிற்சி ஆட்டங்களும் இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு நடைபெற உள்ளது.
