'ஐபிஎல்ல மிஸ் ஆயிடுச்சு.. ஆனா வேர்ல்டு கப்ல என் டார்கெட் கோலிதான்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | May 22, 2019 10:32 AM
ஐபிஎல்லில் முடியாததால், உலகக் கோப்பையில் கோலியை டார்கெட் செய்து, கோலியின் விக்கெட்டை வீழ்த்தவே, தான் ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருப்பதாக உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்காக 3 சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாண்ட ஜோஃப்ரா ஆர்ச்சரின் பெயர், உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணிக்காக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட முதற்கட்ட பட்டியலில் அறிவிக்கப்படவில்லை. எனினும் நேற்று மீண்டும் 3 வீரர்கள் நீக்கப்பட்டு, ஆர்ச்சர் இங்கிலாந்து அணியின் அடுத்த பட்டியலில் இடம் பெற்றார்.
இந்த வருடம்தான் இங்கிலாந்து அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இப்படி ஒரு அதிர்ஷ்டம் ஜோஃப்ராவுக்குக் கிடைத்துள்ளதாக கருத்துக்கள் எழுந்துள்ளன. இதுபற்றி பேசிய ஜோஃப்ர்டா ஆர்ச்சர், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு நிகரான தீவிரம் ஐபிஎல் தொடர்களிலும் உள்ளதாகவும், ஆனால் அழுத்தம்தான் வேறுபாடு என்றும் கூறினார்.
குறிப்பாக, தன் கவனம் எல்லாம் உலகக் கோப்பை தொடரில்தான் இருக்கிறது என்று கூறும் ஜோஃப்ரா ஆர்ச்சர், இந்திய அணியின் கேப்டன், விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்துவதற்கே, தான் ஆவலுடன் இருப்பதாகவும், காரணம் ஐபிஎல் போட்டிகளில் அவரை வீழ்த்த முடியவில்லை என்றும் கூறிய ஜோஃப்ரா, கோலி லெக் ஸ்பின்னர்களிடம் வீழ்ந்துவிடுகிறார் என்றும் தனது வியூகத்தைச் சொல்லியிருக்கிறார்.
