‘கோலி மறைமுகமா சொன்னத இவரு வெளிப்படையாவே சொல்லிட்டாரு’.. காத்திருப்போம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Arunachalam | May 22, 2019 04:56 PM

உலகக்கோப்பை தொடரில் 500 ரன்கள் என்ற மைல்கல் எட்டப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மார்க் வாக் தெரிவித்திருக்கிறார்.

500runs is possible in WC 2019 says Ex player mark Waugh

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வருகின்ற 30 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதனையடுத்து உலக கோப்பையில் விளையாடவுள்ள 10 அணிகளும் இங்கிலாந்தில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில், முதல் போட்டியில் உலகக்கோப்பை தொடரை நடத்தும் இங்கிலாந்து அணி, தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது.

இதையடுத்து, இங்கிலாந்து மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கணித்துள்ளனர். இதனால் பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடியான சூழல்தான் நிழவும் என்று அதனால் அவர்களுக்கு விக்கெட் எடுப்பதில் சற்று கடினமாகதான் இருக்கும் என்று கணித்துள்ளனர்.

இந்நிலையில், ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மார்க் வாக் கூறியதாவது, ‘500 ரன்கள் என்று கூறும்போது, அது சாதிக்கவே முடியாதது போல் தோன்றலாம். 50 ஓவர்களில் 500 ரன்கள் எடுக்க முடியும் என்று நீங்கள் நம்பாமல் இருக்கலாம், ஆனால் எடுக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.

இந்நிலையில், வலிமையான அணி, வீக்கான அணிக்கெதிராக இந்தச் சாதனையை உலகக் கோப்பை தொடரில் படைக்கும் என நினைக்கிறேன். பந்துவீச்சாளர்களுக்கு இது கடினமானதாக இருக்கும் என நான் நினைக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

தற்போதைய சூழலில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனை இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி வசமே இருக்கிறது. ஆஸ்திரேலிய அணிக்கெதிராக கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் அந்த அணி, 481 ரன்களைக் குவித்ததுள்ளது என்று  மார்க் வாக் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த உலகக்கோப்பையில் அதிக டார்கெட் கொண்ட ரன்கள் அடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக பேட்டி ஒன்றில் விராட் கோலியும் தெரிவித்திருந்தார்.

Tags : #ICCWORLDCUP2019 #VIRATKOHLI #MARK WAUGH