‘தோனியின் நாட்டுப்பற்றுக்கு’.. ‘சல்யூட்’ அடிக்க வைக்கும் காட்ரெலின் வைரல் ட்வீட்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Jul 29, 2019 01:20 PM

ராணுவத்தில் கவுரவ லெப்டினென்டாக தோனி பணியாற்றுவதைப் புகழ்ந்துள்ள ஷெல்டன் காட்ரெல் வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

Cottrell salutes MS Dhoni’s inspirational love for country

வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் ஷெல்டன் காட்ரெல் ஜமைக்கா ராணுவத்தில் பணியாற்றியவர். இதனால் கிரிக்கெட் போட்டியின் போது எந்த விக்கெட் எடுத்தாலும் ஆட்டமிழக்கும் வீரருக்கு மரியாதை செலுத்தும் வகையில் காட்ரெல் சல்யூட் அடிப்பது வழக்கம். நடந்து முடிந்த உலகக் கோப்பையிலும் காட்ரெலின் சல்யூட் ரசிகர்கள் அனைவராலும் பெரிதும் ரசிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ராணுவத்தில் சேர்ந்து பயிற்சி பெறுவதை ஷெல்டன் காட்ரெல் பாராட்டியுள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் தோனி விருது பெரும் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள காட்ரெல் அந்தப் பதிவில், “தோனி கிரிக்கெட் களத்தில் உத்வேகமாகத் திகழ்பவர். நாட்டுப்பற்று உடையவரான அவர் விளையாட்டைத் தாண்டியும் தன்னுடைய நாட்டிற்கு செய்ய வேண்டிய கடமையைச் செய்பவர்.

தோனியின் இந்த வீடியோவை நான் எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் பகிர்ந்தேன். ஏனென்றால் அவர்களுக்குத் தெரியும் ராணுவத்தில் பணிபுரிவதை நான் எவ்வளவு கவுரவமாக உணர்கிறேன் என்று. கணவன் மனைவிக்கு இடையேயான இந்தத் தருணம்  நாட்டின் மீதுள்ள காதலையும், ஒருவர் மீதுள்ள மற்றொருவருடைய காதலையும் காட்டுகிறது. என்னைப் போலவே அனைவரும் பார்த்து ரசியுங்கள்” எனக் கூறியுள்ளார்.

 

 

 

 

Tags : #ICCWORLDCUP2019 #TEAMINDIA #MSDHONI #INDIA #ARMY #SHELDONCOTTRELL